%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 11 October 2018 - 15:56
தொழிற்சங்கங்கள், தோட்ட தொழிலாளர்களுக்காக தீர்மானித்துள்ள வேதனம்
843

Views
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 962 ரூபா அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

கடந்த ஜுலை மாதத்தின் வாழ்க்கைச் செலவு புள்ளி விபரத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வாழ்வதற்கு நாளொன்றுக்கு 812 ரூபா தேவை என்ற அடிப்படையில் அதற்கு மேலதிகமாக மருத்துவ மற்றும் கல்வி செலவுகள் உள்ளடங்களாக 912 ரூபா வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், தற்போதுள்ள தேயிலை விற்பனைக்கான 30 ரூபா என்ற தொகை 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு மொத்தமாக 962 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பு செய்வதன் காரணமாக இந்த அடிப்படை தொகையை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்க உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இன்று காலை கூடியவேளை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதில் கலந்துகொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அருள்சாமி எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top