Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E2%80%93+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88
Thursday, 11 October 2018 - 17:01
மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு – சில பகுதிகளில் பலத்த மழை
395

Views
களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை, தொடங்கொட மதுராவல, வலல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்தை மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனுடன், காலி மாவட்டத்தில் நெலுவ, தவலம, எல்பிட்டிய, நாகொட, பத்தேகம மற்றும் யக்கமுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் எதிர்வரும் சில மணித்தியாலங்களுள் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top