Hirunews Logo
%27%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%27+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 11 October 2018 - 19:02
'எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்' மாநாடு ஆரம்பம்
471

Views
'எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அலரிமாளிகையில் இன்று ஆரம்பம்பித்து வைக்கப்பட்டது.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகளினதும், சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளினதும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்கான தளமொன்றை உருவாக்குவதை அடிப்படையாகக்கொண்டு இந்த மாநாடு இடம்பெறுகின்றது.

பூகோள வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் நேரடியாக தாக்கம் செலுத்தும் உலகின் மூன்றில் இரண்டு பங்கு அளவிலான எண்ணெய் கப்பல்களும் மூன்றில் ஒரு பங்கு சரக்கு கப்பல்களும் பயணம் செய்கின்ற மிக முக்கியமான கடல் மார்க்கமாக இந்து சமுத்திரம் உள்ளது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் அதற்கு வெளியில் அமைந்துள்ள நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபற்ற உள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிராந்தியத்தின் முக்கிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இலங்கையை, பிராந்திய வர்த்தக சேவைகள் மற்றும் நிதி கேந்திர நிலையமாக மாற்றும் கொள்கை, இந்த மாநாட்டின் மூலம் மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் சமுத்திரம் தொடர்பான விசேட பிரதிநிதி பீட்டர் தொம்சன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top