%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D....+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F
Thursday, 11 October 2018 - 20:28
யாசகர்கள் கூட தினமும் ஆயிரம் ரூபாய் தேடுகின்றனர்.... ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு இல்லையா?
155

Views
யாசகர்கள் கூட தினமும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிக பணத்தை தேடும்போது, நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறிஸ்லஸ்பாம், அந்தோணிமலை, வெலிங்டன் ஆகிய தோட்ட தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

சுமார் 500ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்லஸ்பாம் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் என எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முதலாளிமார் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிருத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top