Hirunews Logo
%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Friday, 12 October 2018 - 7:37
கூட்டு ஒப்பந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு
68

Views
கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால், அதற்கு தங்களது ஆதரவு நிச்சயம் வழங்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்குமாறு 22 தோட்ட நிறுவனங்களுக்கும் அரசாங்கம் கட்டளையிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

க்ளைபோசெட் களை நாசினி பயன்பாடு குறித்து தோட்ட நிறுவனங்களுக்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நிபந்தனை விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தத் குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், மகாவலி அபிவிருத்தி திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்வைத்திருந்தார்.

கொக்கிலாய், கொக்குத்தொடுவாய், கர்நாட்டுக்கேணி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்களை உடன் மீளப்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிராமங்களின் தமிழ்ப் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,790 Views
22,982 Views
5,389 Views
9,645 Views
1,327 Views
55,829 Views
Top