Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
Friday, 12 October 2018 - 7:49
அமைதியற்ற நிலையை தோற்றுவித்த காவற்துறை அலுவலகரிடம் விசாரணை
17,368

Views
களுத்துறை - தெபுவன நகரில் துப்பாக்கியுடன் அமைதியற்ற நிலையை தோற்றுவித்த காவற்துறை அலுவலகரிடம் நான்கு மணித்தியாலயம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

காவற்துறை விஷேட விசாரணை பிரிவினரால் இந்த வாக்குமூலம் பெற்று கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவற்துறை விஷேட விசாரணை பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற நிலையில் பொறுப்பேற்கப்பட்ட பாரவூர்திக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்படவில்லை என கூறி குறித்த காவற்துறை அலுவலகர் கடந்த 3 ஆம் திகதி தெபுவன நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top