Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+2+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Friday, 12 October 2018 - 14:21
தேங்கியுள்ள 2 லட்சம் விண்ணப்பங்கள்
653

Views
அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தேங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தற்போது இந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக குடியுரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் .....  கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜுலை முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான இரண்டு மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ஒன்பதாயிரம் விண்ணப்பங்கள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர்..... சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர் அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 16 தொடக்கம் 19 மாதங்கள் எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குறித்த தாமதத்திற்கான காரணங்களையும் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 2010 முதல் 2018 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மும்மடங்காகியுள்ளதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாதவகையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், விண்ணப்பங்கள் அனைத்தும்  கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படும் அதேநேரம், விண்ணப்பதாரியின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.

படகுமூலம் வந்து தஞ்சம் கோரிய சுமார் 50 ஆயிரம் பேரில், நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பலர் தற்போது குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு அதிக காலமும் ஆளணி வளங்களும் தேவைப்படுகிறது.

இது ஏனையவர்களின் விண்ணப்பங்களைப் பாதிக்கிறது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு விளக்கமளித்துள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,790 Views
22,982 Views
5,389 Views
9,645 Views
1,327 Views
55,829 Views
Top