Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
Friday, 12 October 2018 - 15:29
நாமல் குமார மீது ஜனாதிபதி அலுவலகம் முறைப்பாடு
5,736

Views
நாமல் குமார என்பவர் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் சேவையாற்றவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரான டாக்டர் சமந்த குமார கிதலவ ஆராச்சியின் கையொப்பத்துடன் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாமல் குமார ஜனாதிபதி செயலகத்தில் வேதனம் பெறும் ஒருவர் அல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த அவர். ஜனாதிபதி செயலணியில் தன்னார்வ தொண்டராக மாத்திரம் செயற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் 20 ஆயிரம் பேர் தன்னார்வ தொண்டர்களாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார என்பவர், ஜனாதிபதி செயலக ஊழியராக தம்மை அடையாளப்படுத்தி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து ஆராய குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரான டாக்டர் சமந்த குமார கிதலவஆராச்சி, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் நாலக்க சில்வா தொடர்பிலும், ஏனைய சில விடயங்கள் குறித்தும் நாமல் குமார வெளியிட்ட தகவல்கள் குறித்து தற்போது கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top