%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Saturday, 13 October 2018 - 16:06
சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு
742

Views
துருக்கியில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்குள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குள் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் கொல்லப்பட்டதாக சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும்இ செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில்இ சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகிஇ தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் திகதி சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

ஜமால் கஷோகியை தூதரகத்துக்கு வரவழைத்து சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் அவரை கொலை செய்துள்ளதாக தகவள் வெளியாகியுள்ளது.

இதற்கான ஆதாரமாக சவுதி தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில கண்காணிப்பு கெமரா பதிவுகளை துருக்கி நாட்டு காவற்துறை வெளியிட்டுள்ளனர். 

இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில்இ இவ்விவகாரம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் பேசப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top