Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21
Saturday, 13 October 2018 - 17:35
மகிழ்ச்சிகர செய்தி...!!
6,523

Views
பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியம் இந்த வருடத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில்களை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரம், பட்டப்படிப்பு, தொழில்பயிற்சி உள்ளிட்ட இலங்கையில் உள்ள அரச தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்கைகளை தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

விண்ணப்பத்தாரிகள், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் குறைந்தது ஆறுபாடங்களில் திறமைச் சித்தி அல்லது உயர் தரத்தில் தோற்றியிருக்க வேண்டும் என்பதுடன் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழின் பிரதி, சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் அல்லது உயர்தர பரீட்சை பெறுபேற்றின் பிரதி, பெற்றோரின் வேதனப் பட்டியல் மற்றும் பெருந்தோட்டத்தில் குடியிருப்பதற்கான தோட்ட முகாமையாளரின் உறுதிச் சான்றிதழ் என்பவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முகவரியான தபால் பெட்டி இலக்கம் 36 – 38 காலி வீதி கொழும்பு -3, என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லது கொழும்பு உயர்ஸ்தானிகரகத்தின்  www.hcicolombo.rg என்ற இணையத்தில் இதனை தரவிறக்கம் செய்ய முடியும் என இந்திய உயர்ஸ்தானிகம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,324 Views
19,150 Views
209 Views
3,844 Views
168 Views
48,470 Views
Top