%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21%21%3B+C.C.T.V+
Saturday, 13 October 2018 - 18:31
கொஸ்கொடயை உலுக்கியுள்ள கோர விபத்து..!!; C.C.T.V
4,646

Views
கொஸ்கொட - துவமோத பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் யுவதி காயமடைந்துள்ளார்.

சிறிய பாரவூர்தி ஒன்று டிப்பர் ரக பாரவூர்தியுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞர் மற்றும் யுவதி பலபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிடிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞர் எல்பிடிய - தல்கஸ்பே பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன், யுவதி பலபிடிய - ஹீனடிய பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பலபிடிய காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்து குறித்த C.C.T.V காணொளி வெளியாகியுள்ளது.

விபத்து குறித்த C.C.T.V  காணொளி இதோ..

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top