Hirunews Logo
39%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+793+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+..
Sunday, 14 October 2018 - 7:57
39ஆயிரத்து 793 டெங்கு நோயாளர்கள் ..
2,331

Views
2018ஆம் ஆண்டின் தற்போது வரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் என சந்தேகிக்கப்படும் 39ஆயிரத்து 793 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்றுநோய்  ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நோயாளர்களுக்கு கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளாவானோர் பதிவாகியுள்ளனர்.

அங்கு பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 654 ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 360 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 459 நோயாளர்களும் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் தமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,261 Views
18,857 Views
509 Views
3,509 Views
125 Views
48,099 Views
Top