Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Sunday, 14 October 2018 - 8:09
அமெரிக்கா சவுதிக்கு கடுமையான தண்டனையை வழங்கும்
4,099

Views
சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஸோகியின் மரணத்துக்கு சவுதி அரசாங்கம்தான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சவுதிக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் தான் மிகுந்த கோபத்திற்கும் வருத்தத்துக்கும் உள்ளாகலாம், என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், சவுதி அரேபியாவுடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்றும் கூறியுள்ளார்.

சவுதி அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை வெளியிட்டு வந்த ஜமால், கடந்த 2ஆம் திகதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றதன் பின்னர், அவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊடகவியலாளர் ஜமால் வந்த வேலையை முடித்துவிட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் சவுதி தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தமது கருத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், சவுதி அரேபிய ஊடகவியாலாளர் ஜமால் கஸோஜி காணாமல்போனமை குறித்த உண்மையைத் தெரிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்  அண்டோனியோ குட்டோரஸும் வலியுறுத்தியுள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,841 Views
23,121 Views
5,540 Views
9,849 Views
1,362 Views
56,051 Views
Top