Hirunews Logo
%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Sunday, 14 October 2018 - 10:32
உயர்மட்ட கலந்துரையாடல் விரைவில்
178

Views
காணி விடுவிப்பு தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலாளர், இராணுவ மற்றும் கடற்படை பிரதானி உள்ளிட்டோருடன் அரசதுறை சார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், யாழ்ப்பாணத்தில் தற்போதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை  விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமான நிலைய ஓடுபாதைக்கு அண்மையில் உள்ள பொதுமக்களின் காணிகள ஒருபகுதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

238 கிராம சேவையாளர் பிரிவு கட்டுவன் காசிஅம்மன் கோயில் பக்கமுள்ள மக்களின் காணிகள் தொடர்பில், உரிமையாளர்கள் அடுத்த வாரத்துக்குள் தங்கள் காணிப்பதினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிப் பதிவு நடவடிக்கைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கட்டுவன் காசி அம்மன் கோயில் வீதிக்கு வருகைதருமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் காணி பரப்புகள் படையினர் வசமுள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அது குறித்து ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,742 Views
22,837 Views
5,233 Views
9,463 Views
1,288 Views
55,620 Views
Top