நாட்டின் விமான சேவை அரசாங்கத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும்

Sunday, 14 October 2018 - 19:54

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
நாட்டின் விமான சேவை அரசாங்கத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மாத்தறை கம்புருபிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்கு பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார்மயப்படுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

விமான சேவையின் 49 சதவீத முகாமைத்துவ பங்குகளை தனியார் மயப்படுத்தப்படுத்துவதற்கான, திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய எதிர்காலத்தில், கேள்விப்பத்திர கோரல் ஊடாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமையே இதற்கான காரணமாக என அமைச்சர் எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips