நியாயமான வேதன உயர்வை கோரி இன்றும் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Sunday, 14 October 2018 - 20:56

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
நியாயமான வேதன உயர்வை கோரி இன்றும் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போட்டத்தை நடத்தினர்.

இதற்கமைய, கொட்டகலை - டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று வேதன அதிகரிப்பை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை வருடாந்தம் அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு வேதன திட்டத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர், சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்துள்ளார்.

ஹட்டனில், பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வை வலியுறுத்தும் மக்கள் மாநாட்டில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன பேச்சுவார்த்தையின் போது 1300 ரூபா வேதனம் கோரப்படவேண்டும் என்றும், அதற்கான நியாயமான தரவுகளை முன்வைக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் இளையதம்பி தம்மையா தெரிவித்துள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips