போரில் சிரிய அரசாங்கம் வெற்றியை நெருங்குதற்கான காரணம் வெளியானது

Monday, 15 October 2018 - 13:27

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் இடம்பெற்றுவரும் சிரிய யுத்தத்தில் இதுவரை 106 இரசாயனத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிபிசி செய்திச் சேவையின் பனோரமாவும், பிபிசி அரபிக் சேவையும் இணைந்து நடத்திய புலனாய்வில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பிபிசி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் கடந்த ஏழு வருடங்களாக அரச எதிர்ப்பு படைகளுக்கெதிராக தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்ப்பு படைகளுக்கு எதிராக சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த போரில் வெற்றியை நெருங்குவதற்கு சிரிய ஜனாதிபதி எவ்வாறான வழிமுறைகளை கையாண்டார் என்பது தொடர்பில் பிபிசி செய்திச் சேவை புலனாய்வு செய்துள்ளது.

இந்த புலனாய்வின் பிரகாரம், கடந்த 2014-2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 106 இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டள்ளது.

அதிகபட்சமாக 2014 ஆம் ஆண்டில் 30 இசாயன தாக்குதல்களை சிரிய அரச படைகள் மேற்கொண்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலான தாக்குதல்கள் அரசு எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹமாஸ், இட்லிப், அலெப்போ, கூட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய இரசாயன தாக்குதல்களால் மாத்திரம் மிகக் குறைந்தபட்சம் 1062 பேருக்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips