ஊடகவியலாளரின் மரணத்தில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம்

Tuesday, 16 October 2018 - 10:35

%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
சவுதி அரேபியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கசோகி துருக்கி இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள கொன்சல் அலுவலகத்தில் உயிரிழந்துள்ளார் என்பதனை சவுதி அராபிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

ஜமால் கசோகி தனது முதலாவது மனைவியை விவாகரத்து செய்தமைக்கான பத்திரங்களை திரட்டுவதற்காக குறித்த காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.

அத்துடன் அவர் சவுதி அரேபிய மன்னர் குறித்து அதிக விமர்சனங்களை தாம் பணிபுரியும் அமெரிக்க ஊடக நிறுவனத்தின் வாயிலாக வொளிக்கொணர்ந்தவர்.

ஆகையினால் அவரை சவுதி அரேபியா பாதுகாப்பு பிரிவினர் பல தடவைகள் கடத்துவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்நிலையில் அவர் கொன்சல் காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவரிடம் அதிகாரிகள் அதிக பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கலாம் எனவும் இதன்போது அவர் அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்கா சந்தேகம் வௌியிட்டுள்ளது.

இதனையடுத்தே ஜமால் கசோகி கொன்சல் காரியாலயத்தில் வைத்து உயிரிழந்திருக்கலாம் என ஏற்றுக்கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips