இம்தியாஸ் காதர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவற்துறையினர்

Thursday, 18 October 2018 - 19:01

%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
அனுமதிப் பத்திரமின்றி துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் என்பனவற்றை தம்வசம் வைத்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனெல்ல தொகுதி இணை அமைப்பாளர் இம்தியாஸ் காதர் தொடர்பில் காவல்துறையினர் தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, குறித்த துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, அவற்றை தம்வசம் வைத்திருந்ததன் நோக்கம் என்ன என்பன தொடர்பில் இம்தியாஸ் காதரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கேகாலை – ஹெஸ்லி பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள இம்தியாஸ் காதரின் வீட்டில் இருந்து இன்று அதிகாலை குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

கேகாலை பிரதேச சபையின் சுதந்திர கட்சி உறுப்பினரான அவர், சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips