%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 09 November 2018 - 19:45
குகேந்திரன் மாநகர சபையில் அங்கம் வகிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு
66

Views
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்வான உறுப்பினர் கே.வி.குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டமையினால் மாநகர சபையில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் குகேந்திரன் இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்க முடியாது என்ற காரணத்தினால் குகேந்திரனின் மாநகர சபை உறுப்புரிமை செல்லுபடியற்றது என தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவிடக்கோரி மாநாகர சபை உறுப்பினர் லோகதயாளனினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கினை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மாநகர சபை உறுப்பினர் பிற நாடு ஒன்றின் பிரஜையாக இருப்பது எண்பிக்கப்பட்ட நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்ட விதிக்கோவை 9இன் பிரகாரம் குகேந்திரன் மாநகர சபை உறுப்பினராக இருப்பதற்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை உறுதி செய்தது.

இதற்கமைய குறித்த நபர் மாநகர சபை உறுப்பினராக பதவியில் நீடிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top