Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+11000+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 09 November 2018 - 19:50
வடக்கில் 11000 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
67

Views
வடக்கில் 11 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் இழப்புக்களை எதிர்நோக்கியவர்களுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்றைய தினம் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இந்த இழப்பீடுகளை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை , மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்   நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று யாழ்.நகரில் இடம்பெற்றது.

யாழ்.வைத்தியசாலை வீதியிலிருந்து ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.போதனாவைத்தியசாலை  முன்றலில் வைத்தியசாலை ஊழியர்களால் மலர்மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக யாழ்.பேரூந்து தரிப்பு நிலைய வீதியூடாக அழைத்து வரப்பட்ட அமைச்சருக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய தொழிற்சங்கத்தினர் கௌரவிப்பு வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து கஸ்தூரியார் வீதியூடாக அழைத்து வரப்பட்ட அமைச்சரை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,624 Views
25,852 Views
133 Views
13,587 Views
174 Views
60,267 Views
Top