Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21
Saturday, 10 November 2018 - 13:22
பிரதமர் மகிந்த பொதுமக்களுக்கு விடுத்துள்ள அதிரடி செய்தி...!
13,307

Views

பொதுத் தேர்தல் மூலம், பொதுமக்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

நிலையான அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுப்பது தலைவர்களின் பொறுப்பும், கடமையுமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஜனாதிபதியினால் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில்  நாட்டின் எதிர்காலம்கருதி தீர்மானம் மேற்கொள்ள பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் மூலமாக நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்களின் உண்மையான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நிலையில், தேசத்தின் தீர்மானமாக அவர்கள் சரியான தீர்மானத்தை மேற்கொள்வார்கள் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பாக தமது ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி, பொதுமக்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது ஜனாநாயக மற்றும் அரசியலமைப்பு ரீதியான செயற்படாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கமானால், சிறந்த பதிலொன்றை அவர்களினால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top