Hirunews Logo
20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Saturday, 10 November 2018 - 16:07
20 பேர் பலி
359

Views
சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது.

நேற்று அந்த உணவகத்தின் அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

3 கார்களில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஹொட்டல் உரிமையாளரும் ஒருவர்.

இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,563 Views
25,552 Views
1,399 Views
13,260 Views
119 Views
59,906 Views
Top