%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Saturday, 10 November 2018 - 18:41
தாம் தேர்தலை எதிர்க்கொள்ள தயார்
924

Views
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் பிரச்சினைகள் உள்ளபோதும் தாம் தேர்தலை எதிர்க்கொள்ள தயார் என ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
 
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
 
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு விரோதமானது என குறிப்பிட்டார்.
 
எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமையை கருத்திற்கொண்டே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
 
இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம், இந்த விடயங்கள் தொடர்பில் நாளை மறுதினம்  உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர்.
 
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,626 Views
46,954 Views
2,991 Views
56,447 Views
1,297 Views
106,172 Views
Top