%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
Saturday, 10 November 2018 - 18:51
தேடும் பணிகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ள துருக்கி
337

Views
கொல்லப்பட்ட சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோகியின் சடலத்தை தேடும் பணிகளை துருக்கி காவல்துறையினர் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும், அவரின் கொலை தொடர்பான குற்ற விசாரணைகள் தொடரும் என அந்நாட்டுத் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளிட்டுள்ளது.
 
ஜமால் கசோகியின் சடலம் அமிலங்களினால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், துருக்கி தலைநகர் ஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரக இல்லத்திலிருந்து அமிலங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
 
சவுதி அரேபிய துணைத் தூதரக இல்லமானது, துணைத் தூதரகத்திற்கு மிக அருகாமையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் நிவ்யோர்க் ரைம்ஸ் நாளிதழின் எழுத்தாளரான ஜமால் கசோகி, சவுதி அரேபிய அரசாங்கத்தையும், மன்னர் மொஹமட் பின் சல்மான் மீதும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், ஜமால் கசோகி கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சவுதி அரேபிய தூணைத் தூதரகத்திற்கு சென்றபோது அங்கு இடம்பெற்ற மோதலில் அவர் உயிரிழந்தார் என சவுதி அரேபியா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,729 Views
47,082 Views
3,303 Views
56,704 Views
1,359 Views
106,439 Views
Top