அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு

Wednesday, 14 November 2018 - 13:49

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபி கொண்டுவந்த அவநம்பிக்கை பிரேரணை பெரும்பான்மை வாக்குடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றில் அறிவித்தார்.

குரல் கோசங்களின் அடிப்படையில் குறித்த பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

எனினும் நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டது.

சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய அமர்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, பிரதமருக்கான ஆசனத்திலும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சி ஆசனத்திலும் அமர்ந்தனர்.

அத்துடன் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றிருந்த ஏ.எச்.எம். ஃபவுசி மற்றும் பியசேன கமகே, மற்றும் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய மனுஷ நாணயக்கார ஆகியோர் எதிர்கட்சி தரப்பில் அமர்ந்தனர்.

பின்னர் நிலையியல் கட்டளைகளை ரத்து செய்வதற்கான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்தார்.

இதற்கு எதிராக, சபையை நாளை வரையில் ஒத்திவைக்க சபை முதல்வர் தினேஸ் குணவர்தன யோசனை முன்வைத்தார்.

சுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து ஜேவிபி தமது அவநம்பிக்கை பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தது.

இதன்போது வாக்கெடுப்பு முறைமை தொடர்பில் சபாநாயகர் சபையில் அறிவித்த போது, சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துடன், நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர் அவநம்பிக்கை பிரேரணை தொடர்பாக சபையில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

எனினும் சபையின் நிலவரங்களின் அடிப்படையில் பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அத்துடன் நிலவிய குழப்பான சூழ்நிலை கருதி நாடாளுமன்றத்தை நாளைக் காலை 10.30 வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இன்றைய சபை அமர்வின் போது வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips