ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது..! அடுத்தகட்ட நடவடிக்கை?

Wednesday, 14 November 2018 - 15:19

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81..%21+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%3F
சபாநாயகரின் கடிதம் கிடைத்தவுடன் ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் ,ஜனாதிபதி அரசியலமைப்பின்படியே செயற்பட்டுள்ளார் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவநம்பிக்கை பிரேரணையின் பிரதியொன்றும் மற்றும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக சபாநாயகர் அலுவலகத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , பாடசாலை சீருடைக்கு வவுச்சர் வழங்கப்பட்டதற்கு பதிலாக மீண்டும் சீருடை வழங்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேபோல் , மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடாத்த சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips