IOC எரிபொருள் விலைகளும் குறைப்பு

Friday, 16 November 2018 - 6:55

IOC+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

நிதிஅமைச்சின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் மற்றும் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் தமது பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி லங்கா ஒட்டோ டீசல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 111 ரூபாவாக நிலவுகிறது.

92 ஒக்டேயின் ரக பெற்றோல் 5 ரூபால் குறைக்கப்பட்டு புதிய விலை 148 ரூபாவாக நிலவுகிறது.

லங்கா சுப்பர் டீசல் யூரோ 4 மற்றும் எக்ஸ்ட்ரா ப்ரீமியம் 95 ஒக்டேயின் பெற்றோல் என்பன லீற்றருக்கு 5 ரூபாய் என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி லங்கா சுப்பர் டீசல் யூரோ 4வின் புதிய விலை லீற்றர் 136 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா ப்ரீமியம் 95 ஒக்டேயின் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 167 ரூபாவாகவும் நிலவுகிறது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips