பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்து விடயம் தொடர்ந்தும் இழுபறி

Friday, 16 November 2018 - 7:47

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+-+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறுவதற்கான உடன்படிக்கை வரைவு தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தொடர்ந்தும் அமைச்சரவையில் விளக்கம் வழங்கவுள்ளார்.

குறித்த உடன்படிக்கை வரைவு தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

குறிப்பாக மைக்கல் கோவே போன்ற முக்கிய அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கைக்கு ஏலவே அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்த போதும், தற்போது அதில் திருத்தங்கள் அவசியப்படுவதாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த உடன்படிக்கை வரைவு குறித்து மீள பேச்சுவார்த்தை நடத்த தயார் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இது பிரதமர் தெரேசா மேயிற்கு பெரும் சங்கட நிலைமையை உண்டுசெய்திருப்பதாக பிரித்தானிய அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips