'விக்கிலீக்ஸ்' இணைய தளத்தின் ஜூலியன் அசாஞ்சே மீது குற்றச்சாட்டு

Friday, 16 November 2018 - 20:39

%27%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%27+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அமெரிக்க அரச அதிமுக்கிய ரகசியங்களை 'விக்கிலீக்ஸ்' இணைய தளத்தின் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange)மீது வொஷிங்டன் நீதிமன்றம் ஒன்று குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்த ரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், 'விக்கிலீக்ஸ்', அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அவரின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது லண்டனில் உள்ள ஈக்வேடோர் (Ecuador) தூதரகத்தில் தஞ்சம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தமது நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக 'விக்கிலீக்ஸ்'பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து விரிவான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips