காட்டுத்தீயின் தாக்கம் தொடர்ந்தும்

Sunday, 18 November 2018 - 12:46

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்க கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயின் தாக்கம் தொடர்ந்தும் அந்த மானிலத்தை அளவில் தாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் தீபாதிப்பு ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் கடுமையான மழை பெய்யும் என அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதிக அளவில் பாதிப்படைந்த பிரதேசங்களிற்கான விஜயம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக குறைந்தது 76 பேர் பலியானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக அரச அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரித்திரத்திலேயே இதற்கு முன்னர் கலிபோனி மானிலத்தை இந்த அளவு சேதத்தை எந்த காட்டுத்தீயும் ஏற்படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips