பிரான்சில் பொது மக்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் மோதல் - நூற்றுக்கணக்கானோர் காயம்

Monday, 19 November 2018 - 13:29

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பிரான்சில் எரிபொருளின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, பொது மக்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவத்தில், 409 பேர் காயம் அடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில், காவற்துறையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 14 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 157 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இரவு பகலாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானின் செல்வாக்கு 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக, கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips