சவுதி அரேபியாவுடன் சிறந்த நல்லுறவைப் பேணவிரும்புவதாக டொனால்ட் டரம்ப் தெரிவிப்பு

Wednesday, 21 November 2018 - 7:33

%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சவுதி அரேபியாவுடன் சிறந்த நல்லுறவைப் பேணவிரும்புவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பில் சர்வதேச அளவில் சவுதிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சவுதி அரேபியா அமெரிக்காவின் மிக முக்கிய பங்காளர் என்றும், பாரிய அளவான பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்ய சவுதி முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கசோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி கொலை செய்யப்பட்டார்.

சவுதி அரசாங்கத்தின் மீது இந்த கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

எனினும் இதனை சவுதி மறுத்து வருகிறது.

எவ்வாறாயினும் சவுதியின் இளவரசர் மொஹமட் பின் சல்மானே இந்த கொலைக்கு உத்தரவிட்டதாக, அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏ. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips