85 ஆயிரம் சிறார்கள் பலி

Wednesday, 21 November 2018 - 14:23

85+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்றுவரும் போரில் மாத்திரம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான பெர்மிங்ஹாமிலுள்ள ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமமானதாகும் என்று 'சேவ் த சில்ரன்' அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

உலகிலேயே மோசமான மனிதாபிமான நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.நா.சபை முயற்சித்து வருகின்றது.

எனினும், தொடரும் உள்நாட்டு போரின் காரணமாக 6 ஆயிரத்து 800 பொதுமக்கள் தற்போதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 22 மில்லியன் பொதுமக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips