%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21%21
Thursday, 06 December 2018 - 9:58
ஆசைக்காட்டி சிறுவனை அழைத்துச் சென்று பெண் செய்த காரியம்!!
4,458

Views
சிறுவனிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதற்காக பெண் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அயனாவரத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர் தன் 17 வயதான மகனைக் காணவில்லை எனப் காவற்துறையில் முறைப்பாடு கொடுத்தார்.

அவரது மகன் அட்டெண்டராக வேலை செய்யும் தனியார் மருத்துவமனை மற்றும் நண்பர்களிடம் விசாரித்த போது அவருக்கும் மேடவாக்கத்தில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா என்பவருக்கும்  தவறான உறவு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சுவேதாவின் வீட்டுக்கு சென்று அவரைத் தேடியபோது அவரையும் காணவில்லை என்ற செய்தி தெரிய வந்துள்ளது.

அதன் பின் இருவரையும் தேடிக் கண்டுபிடித்த காவற்துறையினர் அவர்கள் இருவரையும் காவல்நிலையத்தில்  முன்னிலைப்படுத்தினர்.

சிறுவனைத் தவறான ஆசைக் காட்டி அழைத்துச் சென்றதற்காக சுவேதாவின் மீது போக்ஸோ எனப்படும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆண்கள் மீதே அதிகளவில் பதிவு செய்யப்படும் போக்சோ சட்டம் இரண்டாவது முறையாக ஒரு பெண் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top