Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%21%21
Thursday, 06 December 2018 - 15:10
காதலனுக்காக கட்டிய மனைவியை போட்டு தள்ளிய கணவர்!!
4,927

Views
ஓரினச் சேர்க்கையாளருடனான காதலால் காப்புறுதி பணத்துக்காக மனைவியை கொன்றுவிட்டு உல்லாசமாக வாழ ஆசைப்பட்ட இந்தியருக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

பிரிட்டன் நாட்டில் உள்ள மென்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஜெசிக்கா, தன்னுடன் படித்த மித்தேஷ் பட்டேல் என்ற இந்திய வம்சாவளி மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள நார்த் யார்க் ஷைர் பகுதிக்குட்பட்ட மிடில்ஸ்பரோ நகரில் ரோயல் வீதியில் ஜெசிக்கா - மித்தேஷ் பட்டேல் தம்பதியர் ஒரு மருந்தகம் ஒன்றை நடத்தி, வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அங்குள்ள லிந்தோர்ப்பே புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த மே மாதம் ஜெசிக்கா(34) பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து விரைந்துவந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அளவுக்கதிகமான இன்சுலின் ஊசி மருந்தை ஜெசிக்காவின் உடலில் செலுத்தி மயங்கவைத்த பின்னர், முகத்தை பிளாஸ்டிக் கவரால் பொத்தி, மூச்சுத்திணற வைத்து அவரை கொன்றுவிட்ட விபரம் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மித்தேஷ் பட்டேலை கைது செய்து விசாரித்தபோது, தனக்கும் ஜெசிக்காவின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் சாதித்தார்.

ஆனால், அவரது கைபேசியை ஆராய்ந்தபோது காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

இளம் வயதில் இருந்தே ஆண்களுடனான ஓரினச் சேர்க்கையில் அதிகமான பிரியம் கொண்டிருந்த மித்தேஷ், திருமணத்துக்கு பின்னரும் இதை தொடர்ந்து வந்துள்ளார்.

உலகளாவிய அளவில் ஓரினச் சேர்க்கை பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக 'ஆப்' மூலம் அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழ்ந்துவரும் அமித் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.

அவுஸ்திரேலியா சென்று தனது ஆசைப்படி அமித்துடன் தம்பதியராக சேர்ந்துவாழ மித்தேஷ் திட்டமிட்டார்.

ஆனால், இந்து சம்பிரதாயப்படி மனைவியை விவாகரத்து செய்வதில் உள்ள சிக்கலால் ஜெசிக்காவை கொலை செய்ய திட்டமிட்டார். மேலும், ஜெசிக்காவின் ஆயுள் காப்புறுதி முதிர்ச்சி தொகையான 20 லட்சம் பவுண்டு பணமும் இந்த கொலை திட்டத்துக்கு தூபம் போட்டது.

ஜெசிக்காவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கருமுட்டையை அமித் உடலில் செலுத்தி பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவரது விபரீத புத்தி வேலை செய்தது.

இதை தொடர்ந்து, எப்படி அவரை கொல்லலாம்? என ஆலோசித்த மித்தேஷ், இதுதொடர்பாக பல இணையதளங்களில் அலசி, ஆராய தொடங்கினார். இறுதியாக, அதிகப்படியான இன்சுலின் மருந்தை செலுத்தி ஜெசிக்காவை கடந்த மே மாதம் 14-ம் திகதி கொன்றுள்ளார்.

இந்த கொலையில் தனக்கிருக்கும் தொடர்பை மறைப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களின் கைவரிசை இது என்று காவல்துறையினரை நம்பவைப்பதற்காக சில பொருட்களை உடைத்து காட்சிகளை உருவாக்கினார் என்பதும் காவல்துறை விசாரணை மூலம் தெரிய வந்தது.

இதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் மித்தேஷ் பட்டேல்(37) மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை டீஸ்சைட் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மித்தேஷ் பட்டேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனை காலத்தில் 30 ஆண்டுகள் வரை இடைக்கால விடுப்பில் விடுவிக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,841 Views
23,121 Views
5,540 Views
9,849 Views
1,362 Views
56,051 Views
Top