%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+
Thursday, 06 December 2018 - 15:20
பரீட்சை நிலையத்தில் சிக்கிய மர்ம நபர் - முல்லைத்தீவில் சம்பவம்
1,002

Views
இந்த தடவை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பரீட்சை நிலையம் ஒன்றிலேயே இந்த ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளது.

பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டிய பரிட்சார்த்திக்கு பதிலாக மற்றொருவர் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அவர் தமிழ் மொழி மற்றும் வரலாறு பாடங்களுக்காக இவ்வாறு தோற்றியிருப்பதாக தெவிரிக்கப்படுகின்றது.

அத்துடன், சாதாரண தர பரீட்சை தொடர்பில நாடு முழுவதிலும் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாதாரண தர பரீட்சை தொடர்பில் பொய்யான முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top