Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+37+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
Thursday, 06 December 2018 - 16:22
இலங்கையில் போதைப்பொருள் மோசடி தொடர்பில் 37 ஆயிரம் பேர் கைது
507

Views
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 430 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவற்றின் பெறுமதி 5 ஆயிரத்து 166 மில்லியன் ரூபாய் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருவளை – பலபிட்டிய கடற்பகுதியில் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் தொகையானது, இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பாரிய ஹெரோயின் தொகையென தெரிவித்த காவல்துறை ஊடகப்பேச்சாளர், இந்த வருடத்தில் இதுவரை போதைப்பொருள் மோசடி தொடர்பில் 37 ஆயிரத்து 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top