Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 06 December 2018 - 19:11
ஜனாதிபதி தயாராகியுள்ள விடயம்
8,918

Views
19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் அதன் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக குணாம்சங்களை பாதுகாத்து, நாடாளுமன்ற நடைமுறைக்கமைய அது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள தயார் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச்சட்டத்தை மேலும் பலப்படுத்தி அந்த குறைப்பாடுகளை நிவர்த்திக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் ஜனநாயக ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலைமையில் 19வது திருத்தத்தை நிறைவேற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக்கொண்டுள்ளது.

அவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்திற்கும் இன்றியமையாததாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top