Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21%21
Thursday, 06 December 2018 - 19:59
முற்றாக தடை விதித்து ஜனாதிபதி வௌியிட்ட சுற்றுநிரூபம்!!
17,019

Views
அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை விருந்தகங்களில் நடத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இது தொடர்பில் சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களது வைபவகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கேட்போர் கூடங்கள், நிறுவனங்களில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க நிகழ்வுகள் மற்றும் வைபவங்கள் அதிகளவான பணத்தை செலவிட்டு நட்சத்திர விருந்தகங்களில் நடத்தப்படுகின்றன.

இதன் ஊடாக ஏற்படும் வீண்விரயத்தினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top