%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
Thursday, 06 December 2018 - 19:52
மூன்றாவது நாளாகவும் தொடரும் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்
131

Views
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டமானது மலையகம் மாத்திரமின்றி களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

தெனியாய மேற்பிரிவு, கீழ்பிரிவு, டவுன்சைட் பிரிவு, என்போர்ட் தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தெனியாய தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, என்சல்வத்த, சின்னத்தோட்டம், பெரியதோட்டம் ஆகிய தோட்டங்களை சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்சல்வத்த தேயிலை தொழிற்சாலைக்கு முன்பதாக ஒன்று கூடி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தலவாக்கலை – மட்டுக்கலை, புசல்லாவை டெல்டா, கொட்டகலை - ஸ்டோனிகிளிப் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஸ்கெலியா, சாமிமலை, நல்லத்தண்ணி மற்றும் நோட்டன் ஆகிய காவற்துறை பிரிவுக்குட்பட்ட 31 தோட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 169 பெருந்தோட்ட தொழிலாளர்களில் ஆயிரத்து 932 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு சென்றுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,456 Views
46,692 Views
2,312 Views
55,887 Views
1,194 Views
105,605 Views
Top