%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Saturday, 08 December 2018 - 16:13
பிரேசிலில் இடம்பெற்ற வங்கி கொள்ளையில் 12 பேர் பலி
1,120

Views
பிரேசில் நாட்டில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் மரணித்தனர்.

பிரேசிலின் சியரா மாநிலம் மிலக்ரஸ் பகுதியில் உள்ள வங்கியொன்றில் கொள்ளையிட முயற்சிக்கப்பட்டபோது, காவல்துறையினருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த தாக்குதலில் கொள்ளையர்களால் பொதுமக்கள் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 6 பேர் உட்பட 12 பேர் மணித்துள்ளனர்.

அத்துடன், கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,518 Views
46,823 Views
2,634 Views
56,158 Views
1,231 Views
105,882 Views
Top