%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Saturday, 08 December 2018 - 19:05
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பணிப்புறக்கணிப்புக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு
176

Views
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் பெருந்தோட்டவாரியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புக்கு தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் மூலம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவார்களே ஆனால் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடுவதாக தெரிவித்த அவர், உரிய காலம் அறியாது பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.

இந்த பணிப்புறக்கணிப்பிற்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து செயற்படுவதும் தவிர்ப்பதும் அவர்களின் விருப்பத்தின்பால்பட்டதென, இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என எச்சரித்தார்.

இதனிடையே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

கட்சித் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக, கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,763 Views
47,140 Views
3,490 Views
56,827 Views
1,385 Views
106,575 Views
Top