%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
Sunday, 09 December 2018 - 7:37
கல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது
24,079

Views
கல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் 03 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நள்ளிரவு வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து அதிக வேகமாக பயணித்த மகிழுந்து ஒன்று சிற்றூர்ந்து ஒன்றுடன் மோதியதில் சிற்றூர்ந்தின் சாரதி உயிரிழந்தார்.

அதில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து குறித்த மகிழுந்து சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று, ரத்மலானை - மெலிபன் சந்திக்கு அருகில் மேலும் ஒரு மகிழுந்து மற்றும் உந்துருளி ஆகியவற்றுடன் மோதியுள்ளது.

இதன்போது மகிழுந்து மற்றும் உந்துருளி என்பவற்றின் சாரதிகளும் உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து மதுபோதையுடன் இருந்த சாரதி செலுத்திய வாகனம், சுவரொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த குறித்த சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தை ஏற்படுத்தியவர் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,626 Views
46,954 Views
2,991 Views
56,447 Views
1,297 Views
106,172 Views
Top