%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 09 December 2018 - 8:46
அரச எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும்
469

Views
ஃப்ரான்ஸில் அரச எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 
 
பாரிஸில் நான்காவது வார இறுதி நாளிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது பாதுகாப்பு தரப்பினரால் றப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1000 பேர் வரையில் ஃப்ரான்ஸ் முழுவதிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக, 126 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

எனினும் யாருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
குறைந்த பட்சம் 3 காவற்துறை அதிகாரிகளும் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஃப்ரான்ஸில் எரிபொருளுக்கான வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஞ்சள் ஆடை இயக்கத்தினால் இந்த போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஆயினும் இவை எல்லைக் கடந்து வன்முறைகளாக பதிவாகி இருப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 
 
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,626 Views
46,954 Views
2,991 Views
56,447 Views
1,297 Views
106,172 Views
Top