இராணுவ ஆலோசகராக ஜென்ரல் மாக்

Sunday, 09 December 2018 - 13:05

+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+
தமது முதல் தர இராணுவ ஆலோசகராக ஜென்ரல் மாக் மில்லியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
 
இந்த புதிய நியமனம் அமெரிக்க செனேட் சபையின் அனுமதியினை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த பதவியை வகிக்கும் ஜென்ரல் ஜோசப் டன்போல்ட், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஓய்வு பெறவுள்ளார்.

ஓய்வு பெற்று செல்லும் மற்றும் புதிய நியமனத்தை பெற்றுள்ள இரண்டு அதி உயர் இராணுவ தளபதிகள் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ள சேவை அளப்பரியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
  
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips