Hirunews Logo
Update+%3A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
Thursday, 13 December 2018 - 15:23
Update : நாடே எதிர்ப்பார்த்துள்ள நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சற்றுமுன் கிடைத்த செய்தி!
8,922

Views
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிப்பு  இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின்பெரேரா உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என மனுக்களை விசாரணை செய்த நீதியரசர்கள் ஆயம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் , தீர்ப்பு அறிவிக்கப்படும் உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேபோல்,  விசேட காவற்துறை குழுக்களும் நீதிமன்ற வளாகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 13 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த தினம் நிறைவடைந்திருத்த போது, மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் தினமொன்றில் அறிவிக்கப்படும் என பிரதம நீதியரசர் நளின் பெரேரா அறிவித்திருந்தார்.

இதேநேரம், தீர்ப்பு வெளியிடப்படும் வரை ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அமுலாக்கப்படுவதை தடைசெய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையை நீடிக்க நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்திருந்தது.

கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 13 தரப்புக்களினால் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அதில் இடையீட்டுத் தரப்பினராக தம்மையும் உள்வாங்குமாறு கோரி மேலும் சிலரினால் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, குறித்த மனுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ள பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட ஆயம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நியமிக்கபபட்டது.

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் குறித்த விடயம் தொடர்பில் சமர்ப்பனங்களை முன்வைத்திருந்தார்.

அதன் பின்னர், குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பை எதிர்வரும் தினமொன்றில் அறிவிக்க உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை, பிரதம நீதியரசர் நளின் பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான உடனடி செய்திகளுக்கு ஹிரு டீ.வி , ஹிரு எப்.எம் மற்றும் www.hirunews.lk இணைத்தளம் ஊடாக இணைந்திருங்கள்....




update : Wednesday, 13 December 2018 - 16.13


-------------------------------------------------------

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி தற்போதைய நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

10 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின்பெரேரா உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பிற்காக விசேட காவற்துறை குழுக்கள் அழைக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான உடனடி செய்திகளுக்கு ஹிரு டீ.வி , ஹிரு எப்.எம் மற்றும் www.hirunews.lk இணைத்தளம் ஊடாக இணைந்திருங்கள்....

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,509 Views
25,340 Views
993 Views
13,005 Views
73 Views
59,622 Views
Top