%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Thursday, 13 December 2018 - 17:03
நாட்டின் சில பகுதிகளில் இன்று மற்றும் நாளை நீர் வெட்டு
235

Views
நுவர வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடு காரணமாக இன்று இரவு 7 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம்  குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , அனுராதபுரம் நகரம் , விஜயபுர , யாழ்ப்பாணம் சந்தி , குருந்தன்குளம் மற்றும் ரம்பேவ போன்ற பிரதேசங்களில் இவ்வாறு நீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதேவேளை , வீதி அபிவிருத்தி பணிகள் காரணமாக நாளை நள்ளிரவு 12 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணி வரை 18 மணி நேரம் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்ய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தீர்மானித்துள்ளது.

மொரகஸ்முல்ல , ராஜகிரிய , எதுல்கோட்டை , ஒபேசேகரபுர , பண்டாரநாயக்கபுர , நாவல , கொஸ்வத்த மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரை பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிளை வீதிகளிலும் நீர் விநியோகம தடை செய்யப்படவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top