%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
Thursday, 13 December 2018 - 17:08
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
8,616

Views
அரசியல் யாப்புக்கு அமைய நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்குள் கலைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியால் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தமை மற்றும் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை என்பன யாப்பு மீறல் என்றும் சட்ட விரோதமானது என்றும் உயர் நீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட ஆயம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதி தீர்ப்பு இன்று மாலை நான்கு மணிக்கு வழங்கப்படும் என காலை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்திருந்தார்.

தீர்ப்பு வழங்கப்படும் நிகழ்வை காண்பதற்கு மனுதாரர்களுடன் அரசியல் பிரமுகர்களும், ஊடகவியலாளர்களும் உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்ற நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் 502வது அறைக்கு மாலை 4.55 அளவில் 7 நீதியர்களும் வருகை தந்தனர்

ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்து கடந்த நவம்பர் ஒன்பதாம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானியின் மூலம் தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நவம்பர் மாதம் 12 ஆம் திகதி 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வீ.பி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலும் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் 10 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த நவம்பர் மாதம் 12, 13 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நாடாளுமன்றை கலைப்பது தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானியை நிறுத்திவைப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், குறித்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 4,5, 6ஆம் மற்றும் எழாம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.

இந்த விசாரணைகளின் இறுதி தினத்தில், நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும்வரை குறித்த வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு 7 பேர் கொண்ட நீதியரசர்களால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நான்கரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்ற கலைக்கப்பட்டமை யாப்பை மீறிய செயல் எனவும் சட்டவிரோதமானது எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன் நாடாளுமன்ற கலைப்பதற்கு 3 இல் 2 பெரும்பான்மை அவசியம் எனவும் அறிவித்தது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,427 Views
46,575 Views
2,077 Views
55,704 Views
1,160 Views
105,445 Views
Top