Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21%21
Thursday, 13 December 2018 - 17:39
சூறாவளி ஏற்படும் சாத்தியம் - மீனவர்களை உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தல்!!
475

Views
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இத் தொகுதி அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு மற்றும ்திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரை கடலுக்கு அப்பால் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

குறித்த பிரதேசங்களில் உள்ள மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் பாதுகாப்பான கடற்பிரதேசத்திற்கு அல்லது கரைக்கு இன்று நள்ளிரவுக்கு முன்னர் திரும்புமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,509 Views
25,340 Views
993 Views
13,005 Views
73 Views
59,622 Views
Top